Skip to main content
பார்வையற்றோருக்குப் புதிய நம்பிக்கை!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பார்வையற்றோருக்குப் புதிய நம்பிக்கை!

வாசிப்புநேரம் -
பார்வையற்றோருக்குப் புதிய நம்பிக்கை!

படம்: Envato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கண்பார்வை இல்லாதவர்களில் பார்வையை ஓரளவுக்கு மீட்டெடுக்க ஒருவகையான மரபணுச் சிகிச்சை உதவக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நொபேல் பரிசு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் உருவானது அந்தச் சிகிச்சை.

அது பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது.

Optogenetic Therapy என்று அழைக்கப்படும் இந்த அணுகுமுறை, ஒளியைப் பயன்படுத்தி நரம்பு உயிரணுக்களைச் செயல்பட வைக்கும் அல்லது செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

அந்த முறையைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டில் கண் பார்வை முற்றிலும் இல்லாத ஒருவருக்குப் பார்வையை ஓரளவுக்கு மீண்டும் கொண்டுவந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதன் பிறகு அந்த நபர் உட்பட 9 பேர் மீது சோதனை நடத்தப்பட்டது.

சிகிச்சையின்போது அவர்களுக்கு ஒரே ஒரு ஊசி போடப்பட்டது.

இந்த ஊசி, கண்ணில் எஞ்சியிருக்கும் உயிரணுக்களுக்கு, ஒளியை உணரும் திறனை வழங்குகிறது.

10 பேரில் 6 பேருக்கு சிகிச்சைக்குப் பிறகு, ஒளியை உணரும் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.

ஒருவருக்கு கண்ணில் ஒரு கடுமையான பக்கவிளைவு மட்டுமே ஏற்பட்டது. ஆனால், அது சில நிமிடங்களிலேயே சரியாகிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எனினும் சிகிச்சைக்கு சில வரம்புகள் உள்ளன.

பார்வையற்றவர்களால் பொருள்களை அடையாளம் காண முடியும். ஆனால் முகங்களை அடையாளம் காண்பது சிரமம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்