flydubai விமானி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டார்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Ammar Awad
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
flydubai விமானத்தில் விமானியைத் தாக்கிய இணை விமானி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் கூறியிருக்கிறது.
ஆனால் அவரின் நோக்கம் என்ன என்பதை அந்நாடு வெளியிடவில்லை.
விமானி அறையில் அவசரத் தேவைக்காக வைக்கப்பட்டிருக்கும் கோடரியைக் கொண்டு விமானியை அவர் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.
இணை விமானி ஓமானைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி (Hamam al-Hammami) என்று கூறப்பட்டது.
அவர் தீவிரவாதச் சித்தாந்தங்களைப் பின்பற்றுபவர் என்பதால் விமானத்தைச் செலுத்த அவருக்கு ஓமானில் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் பல ஊடகங்கள் கூறின.
கடந்த புதன்கிழமை (30 செப்டம்பர்) துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவுக்குச் (Tel Aviv) சென்றுகொண்டிருந்த விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறங்கியது.
இணை விமானி நடத்திய தாக்குதல் அதற்குக் காரணம் என்று சம்பவம் முடிந்தவுடன் தெரியவந்தது.
தற்போது அவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆதாரம் : AFP