Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் காலமானார்

வாசிப்புநேரம் -
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் காலமானார்

 (படம்: ADAM JAN / AFP)

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீது அல்-நஹ்யான் (Sheikh Khalifa Bin Zayed Al-Nahyan) காலமானார்.

அவருக்கு வயது 73.

அவரது இறுதிச்சடங்கு நேற்று (13 மே) நடத்தப்பட்டது.

அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் ஷேக் கலீஃபா பங்காற்றினார்

2014இல் ஷேக் கலீஃபாவுக்குப் பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரைப் பொதுஇடத்தில் காண்பது அரிதானது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் துணையதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (Sheikh Mohammed bin Rashid Al-Maktoum), தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்பார்.

30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்