3,300 Uber ஊழியர்கள் பணிநீக்கம் - ஓட்டுநரில்லா வாடகைக் கார் சேவைகளில் முதலீடு
வாசிப்புநேரம் -
படம்: REUTERS/Andrew Kelly
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Uber நிறுவனம் கோவிட் தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஆகப் பெரிய அளவில் ஆட்குறைப்புச் செய்யவிருக்கிறது.
சுமார் 3,300 ஊழியர்கள் வேலை இழப்பர் என்று அது தெரிவித்தது.
அவர்கள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 10 விழுக்காடு.
நிர்வாக நிலைகளில் உள்ள வேலைகள் குறைக்கப்படும்.
ஓட்டுநரில்லா டாக்சிகளிடம் இருந்து போட்டி அதிகமாகும் நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. .
வரும் ஆண்டுகளில் ஓட்டுநரில்லா டாக்சிகளில் 10 பில்லியன் டாலருக்கும் (12.7 பில்லியன் வெள்ளி) அதிகமாக முதலீடு செய்ய Uber திட்டமிட்டுள்ளது
ஓட்டுநரில்லா வாகன முறைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாக அது சொன்னது.
ஓட்டுநரில்லா டாக்சி சேவைகளை நாடும் இடமாக விளங்க விரும்புவதாகவும் அது குறிப்பிட்டது.
செயற்கை நுண்ணறிவுக்கென இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட பணத்தை அதன் ஊழியர்கள் நான்கே மாதங்களில் முடித்துவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
அதனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த செலவுகளால் நிறுவனம் திணறுவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டன.
கடந்த ஆண்டு இறுதியில் Uber உலகளவில் சுமார் 34,000 ஊழியர்களைக் கொண்டிருந்தது.
ஆதாரம் : CNA