Skip to main content
ஆபாசமாகப் பேசிய சந்தேகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆபாசமாகப் பேசிய சந்தேகம் -தமிழக எதிர்த்தரப்புத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

வாசிப்புநேரம் -
ஆபாசமாகப் பேசிய சந்தேகம் -தமிழக எதிர்த்தரப்புத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது

படம்: Facebook/DMK Youth Wing

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தமிழ்நாட்டில் எதிர்த்தரப்புத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் மாநில முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நடிகை திரிஷா ஆகியோரைக் குறித்து ஆபாசக் கருத்துகளை வெளியிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து நேற்று (3 ஆகஸ்ட்)  தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரு உதயநிதி உரையாற்றினார்.

அந்த விவகாரத்தில் விஜய் அக்கறை கொள்ளவில்லை என்று உதயநிதி குற்றஞ்சாட்டினார்.

அப்போது அவரது தொண்டர்கள் "திரிஷா" என்று முழங்கத் தொடங்கினர்.

திரு உதயநிதி பின்னர் ஆபாசமான ஒரு கருத்தைச் சொன்னதாகக் கூறப்படுகிறது.

திரு உதயநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க)  குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

அவர் தமது உரையில் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கட்சி கூறியது.

திரு உதயநிதி மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக அது சாடியது.

அவர் திரு விஜய்யை எதிர்த்துப் பேசியதற்காகக் கைதுசெய்யப்படவில்லை; ஒரு பெண்ணை இழிவாகப் பேசியதற்காகக் கைதுசெய்யப்பட்டார் என்று திரு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் கூறினர்.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்