Skip to main content
ரசிகைகளை முத்தமிடும் காணொளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரசிகைகளை முத்தமிடும் காணொளி - சர்ச்சையில் சிக்கியிருக்கும் பின்னணிப் பாடகர் உதித் நாராயண்

வாசிப்புநேரம் -
ரசிகைகளை முத்தமிட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் உதித் நாராயண் (Udit Narayan) தம்மைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சியொன்றின்போது தம்முடன் படமெடுக்க வந்த ரசிகைகளை அவர் முத்தமிடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.

மற்றொரு காணொளியில், ரசிகை ஒருவர் அவருடன் படமெடுத்துவிட்டு அவரைக் கன்னத்தில் முத்தமிடுவதையும் அதற்குப் பதிலாக உதித் நாராயண் அப்பெண்ணின் உதட்டில் முத்தமிடுவதையும் காட்டுகிறது.

அது எப்போது எங்கு நடந்த கலைநிகழ்ச்சி என்று தெளிவாகத் தெரியவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அது சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா அல்லது கனடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி என்று உதித் நாராயண் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

அது சர்ச்சைக்குரிய செயல் அல்ல; மாறாக ரசிகர்களுக்கும் தமக்கும் இடையிலான அன்பின் வெளிப்பாடு என்று அவர் Bollywood Hungama என்ற ஊடகத்திடம் கூறியுள்ளார்.

"ரசிகர்கள் என்னை நேசிக்கின்றனர். நானும் அவர்களை நேசிக்கிறேன்," என்று அவர் சொன்னதாக independent.co.uk இணையத்தளம் குறிப்பிடுகிறது.

இதனால் தமக்குச் சங்கடமோ அவமானமோ இல்லை என்றும் உதித் நாராயணன் கூறியிருக்கிறார்.

ஆனால் இணையவாசிகள் அவரது செயலைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

அவர் மீது வைத்திருந்த மரியாதையை இழந்ததாகப் பலர் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

சிலரோ, ரசிகைகள் அத்துமீறி நடந்துகொள்வதால் அவரைக் குறை சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்