"FIFAவைப் புறக்கணிப்போம்" - UEFA மிரட்டல்
REUTERS/Dado Ruvic/Illustration
This audio is generated by an AI tool.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் தனியார் முதலீட்டுத் திட்டத்தை FIFA முன்னெடுத்தால் அதன் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக UEFA எனும் ஐரோப்பியக் காற்பந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
தனது 55 உறுப்பு நாடுகளும் ஒருமனதாக அந்த முடிவை எடுத்திருப்பதாக UEFA கூறியது.
உலகக் கிண்ணம் விற்பனைச் சொத்து அல்ல என்று அது சுட்டியது.
உலகக் காற்பந்துப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியை ஒருபோதும் முதலீட்டுப் பொருளாகக் கருதக் கூடாது என்றும் UEFA வலியுறுத்தியது.
வட, மத்திய அமெரிக்க நாடுகளை பிரதிநிதிக்கும் CONCACAF அமைப்பும் FIFA வின் தனியார் முதலீட்டுத் திட்டத்தை நிராகரித்துள்ளது.
உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய போட்டிகளை ஏற்றுநடத்த ஒரு வர்த்தகக் கிளை நிறுவனத்தை அமைக்க FIFA திட்டமிடுகிறது.
FIFA Forward Enterprise என்பது அந்த புதிய கிளை நிறுவனத்தின் பெயர்.
அதில் மூன்றாம் தரப்புகள் சிறு முதலீடு செய்ய அழைக்கப்படும். அவற்றுக்கு கட்டுப்படுத்தும் உரிமை இருக்காது என்கிறது FIFA.
அதற்கு முதலில் மன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர் சங்கங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
FIFAஇல் 211 உறுப்பினர் சங்கங்கள் உள்ளன.