Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன் - சீனா உறவில் நிலவிய பொற்காலம் போய்விட்டது - பிரதமர் ரிஷி சுனாக்

வாசிப்புநேரம் -
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் சீனாவுடனான உறவில் நிலவிய பொற்காலம் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்.

வெளியுறவுக் கொள்கை குறித்த முதல் உரையில் அவர் அவ்வாறு கூறினார்.

சீனாவில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்துவோருக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.

இருநாட்டுக்கும் இடையே கடந்த பத்தாண்டாக இருந்த நெருங்கிய பொருளியல் உறவு அப்பாவித்தனமானது என்று அவர் குறிப்பிட்டார்.

போட்டி நாடுகளை அணுகும்போது வெறும் கற்பனையை விட்டுவிட்டு வலுவான உண்மைநிலையை பிரிட்டன் பின்பற்றவேண்டும் என்றார் அவர்.

அதே நேரத்தில் கெடிபிடிப் போர் மனப்பான்மை தேவையில்லை. உலக அரங்கில் சீனாவின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை என்று திரு. ரிஷி சுனாக் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் அவர் பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, சீனாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று ஆளும் கன்சர்வெடிவ் கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்