Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன்: பயணிகள் விமானத்தில் கொண்டுசெல்லும் திரவத்தின் அளவு வரம்பு குறைக்கப்பட்டது

வாசிப்புநேரம் -

பிரிட்டன் விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பைகளில் 100 மில்லி லிட்டர் அளவுகொண்ட திரவத்தைத்தான் எடுத்துச்செல்ல முடியும் என்ற வரம்பை 2024ஆம் ஆண்டு நடுப்பகுதிவாக்கில் அகற்றக்கூடும். 

அதற்குள் அதிநவீன பாதுகாப்பு உணர்கருவிகள் பொருத்தப்படக்கூடும் என்பதே அதற்குக் காரணம் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்தன. 

மிகவும் துல்லியமான முப்பரிமாண உணர்கருவிகளான அவை பொருள்களை அனைத்துத் திசைகளிலிருந்தும் சோதனையிட உதவும்.

அதுகுறித்து இன்னும் ஆராயப்படுகிறது என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மடிக்கணினிகள், கைக்கணினிகள், திரவங்கள் முதலியவற்றைக் கையில் எடுத்துச் செல்லும் பயணிகள் அவற்றைப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தவேண்டும். 

திரவத்தின் அளவு 100 மில்லி லிட்டரைத் தாண்டக்கூடாது. அத்துடன் வெளியில் தெரியக்கூடிய பிளாஸ்டிக் பைககளில்தான் அதனை வைத்திருக்கவேண்டும்.

16 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம்கண்ட விதிமுறை அது. 

மென்பானத்தைப் போன்ற வெடிபொருள்களைக் கொண்டு விமானங்களைத் தகர்க்கும் நோக்கில் தீட்டப்பட்ட பயங்கரவாதச் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது நடப்புக்கு வந்தது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்