Skip to main content
ரஷ்ய விமான எரிபொருள், டீசல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ரஷ்ய விமான எரிபொருள், டீசல் - தடையைத் தளர்த்தியது பிரிட்டன்

வாசிப்புநேரம் -
ரஷ்ய விமான எரிபொருள், டீசல் - தடையைத் தளர்த்தியது பிரிட்டன்

(படம்: AP/Philippe Magoni)

பிரிட்டன், ரஷ்ய விமான எரிபொருள், டீசல் இறக்குமதிக்கான தடையைத் தளர்த்தியுள்ளது.

மத்திய கிழக்குப் போரால் எரிபொருள் விலை உயர்வதைக் கட்டுப்படுத்த அது உதவும்.

இந்தியா, துருக்கியே போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்யக் கச்சா எண்ணெயை பிரிட்டன் இறக்குமதி செய்ய இது வழிவகுக்கும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மாற்றம் நடப்பில் இருக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் சொன்னது.

புதிய அறிவிப்புக்கு பிரிட்டனின் எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சந்தையில் மாஸ்கோவின் எரிபொருள் குறைவதால் ரஷ்யா பலவீனமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) தமது முடிவைத் தற்காத்துப் பேசினார்.

சென்ற ஆண்டு அக்டோபரில் பிரிட்டன் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தருவிக்கப்படும் இறக்குமதிக்குத் தடை விதித்தது.

ரஷ்யா உக்ரேனில் போரைத் தொடர்வதற்கான நிதியைத் துண்டிப்பது அதன் நோக்கம்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்