Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எலிசபெத் அரசியாரிடம் மன்னிப்புக் கோரிய பிரிட்டிஷ் அரசாங்கம்

வாசிப்புநேரம் -
எலிசபெத் அரசியாரிடம் மன்னிப்புக் கோரிய பிரிட்டிஷ் அரசாங்கம்

(படம்: AFP / POOL / Matt Dunham)

பிரிட்டிஷ் அரசாங்கம், எலிசபெத் அரசியாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

சென்ற ஆண்டு ஏப்ரலில் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச்சடங்கிற்கு முன்தினம் பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Jonson) ஊழியர்கள் விருந்து நிகழ்ச்சி நடத்தியதாகத் தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து எலிசபெத் அரசியாரிடம், பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

கிருமிப்பரவலை முறியடிக்க உள்ளரங்குகளில் ஒன்றுகூடுவதற்கான தடை நடப்பிலிருந்தபோது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டபோது, விருந்து நிகழ்ச்சி நடந்தது மிகுந்த வருத்தத்துக்குரியது என்று பிரதமர் ஜான்சனின் பேச்சாளர் கூறினார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி எண். 10 டவுனிங் ஸ்டிரீட்டில் (Downing Street) ஊழியர்கள் மது அருந்திவிட்டு ஆடியதாகத் தகவல் வெளியானது. அதற்கு மறுநாள் எலிசபெத் அரசியாரின் கணவருடைய இறுதிச் சடங்கு இடம்பெற்றது.

திரு. ஜான்சன் அவருடைய இல்லத்தில் இருந்தார் என்றும் எந்த ஒன்றுகூடலுக்கும் அவர் அழைக்கப்படவில்லை என்றும் பேச்சாளர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்