"உக்ரேனில் நிபந்தனையற்ற ஒரு மாதச் சண்டைநிறுத்தம் வேண்டும்" - பிரிட்டிஷ் பிரதமர்
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) உக்ரேனில் நிபந்தனையற்ற ஒரு மாதச் சண்டைநிறுத்தம் வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் (Ursula von der Leyen) அதை ஆதரித்தார். அத்தகைய சண்டைநிறுத்தம் அர்த்தமுள்ள அமைதிப்பேச்சுக்குக் கைகொடுக்கும் என்றார் அவர்.
ஐரோப்பாவின் பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் உக்ரேனில் அமைதி நீடிப்பது முக்கியம் என்று அவர் சொன்னார்.
உக்ரேனுக்கான ஆதரவை வலுப்படுத்த ஐரோப்பியத் தலைவர்கள் தலைநகர் கீவ் சென்றுள்ளனர்.
ஐரோப்பியத் தலைவர்கள் மேற்கொண்டு தடைகள் விதிப்பது குறித்துப் பேசும்நிலையில் ரஷ்ய அரசாங்கப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் (Dmitry Peskov), ரஷ்யாவுக்குத் தடைகள் பழகிவிட்டதாகச் சொன்னார்.