Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முக்கியமான கட்டடங்களில் சீனாவுடன் தொடர்புடைய கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தவேண்டாம்! - பிரிட்டன்

வாசிப்புநேரம் -
முக்கியமான கட்டடங்களில் சீனாவுடன் தொடர்புடைய கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தவேண்டாம்! - பிரிட்டன்

(படம்: AFP)

பிரிட்டிஷ் அரசாங்கம் சீனாவுடன் தொடர்புடைய கண்காணிப்புக் கேமராக்களை முக்கியமான கட்டடங்களில் பொருத்துவதை நிறுத்துமாறு அதன் அமைச்சுகளிடம் கூறியுள்ளது.

தற்போதைய, எதிர்காலப் பாதுகாப்பு நலன் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கண்காணிப்பு அமைப்புகளின் திறனும் தொடர்பும் அதிகரித்துள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சீனப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு உட்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் கேமராக்களுக்குப் புதிய விதி பொருந்தும்.

அதன்படி அத்தகைய கருவிகளை முக்கியக் கணினிக் கட்டமைப்புகளிலிருந்து அகற்றும்படி கூறப்பட்டது.

அவற்றை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கும்படிப் பரிந்துரைக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa