உக்ரேன் உதவி விநியோக நிலையத்தில் தாக்குதல் - 40 பேர் பலி
(படம்: Reuters/Sergiy Chalyi)
This audio is generated by an AI tool.
உக்ரேனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 40க்கு உயர்ந்துள்ளது.
30க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறினார்.
தெற்கே அமைந்துள்ள Zaporizhzhia வட்டாரத்தில் உதவி விநியோக மையமாகச் செயல்பட்ட கட்டடத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன் மீது பல வெடிகுண்டுகள் பாய்ச்சப்பட்டன.
மற்றொரு தற்காலிக நிலத்தடித் தங்குமிடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மக்கள் தங்கியிருந்ததாக உக்ரேன் கூறுகிறது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்ததிலிருந்து நடத்தப்பட்ட ஆக மோசமான தாக்குதலில் அதுவும் ஒன்று எனத் திரு ஸெலன்ஸ்கி கூறினார்.
இதற்கிடையே அமெரிக்க இடைத்தவணைத் தேர்தல் முடிவுகள், ரஷ்ய-உக்ரேன் அமைதி முயற்சிகளைப் பாதிக்காது என்று நம்புவதாய் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்த முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று நம்புவதாக அது சொன்னது.