உக்ரேனின் புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலை...(படங்கள்)

படம்: Sergei SUPINSKY / AFP
உக்ரேன் தலைநகர் கீவின் (Kyiv) புறநகரான புச்சாவில் (Bucha) ரஷ்யப் படையினர் பொதுமக்கள் பலரைப் படுகொலை செய்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதகாலம் அந்நகர் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்தது.
கடந்த வார இறுதியில் உக்ரேனியப் படையினர் நகரை மீண்டும் கைப்பற்றினர்.
புதைகுழிகளிலும் தெருக்களிலும் குறைந்தது 300 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நகர மேயர் தெரிவித்தார்.
சிலரின் கைகள் கட்டிவைக்கப்பட்டன.
சிலர் சித்திரவதை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.
அந்நகரின் மக்களை ரஷ்யப் படையினர் திட்டமிட்டுக் கொன்றதாக உக்ரேன் குற்றஞ்சாட்டுகிறது.
புச்சா நகரில் உள்ள மக்களின் நிலைமை...படங்கள் வாயிலாக...

புதைகுழிகளில் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டுள்ள சடலங்கள்....

கைகள் கட்டிவைக்கப்பட்ட ஓர் ஆணின் சடலம்...

இருவரின் சடலங்களைக் கொண்டுசெல்லும் ஊழியர்கள்...

ரஷ்யப் படையினரால் கொல்லப்பட்ட ஒருவரின் சடலத்தைத் தூக்கிச்செல்லும் ஊழியர்கள்...

மாண்ட ஒருவரின் சடலத்தைப் பையில் வைக்கின்றனர் ஊழியர்கள்...