Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணைத்துக்கொள்ளப்பட்ட வட்டாரங்கள் உக்ரேன் வசம் சென்றாலும் அவை மீண்டும் கைப்பற்றப்படும் - ரஷ்யா

வாசிப்புநேரம் -

ரஷ்யா, உக்ரேனில் இருந்து அண்மையில் இணைத்துக்  கொள்ளப்பட்ட பகுதிகள் கீவின் வசம் சென்றாலும், மீண்டும் அவை கைப்பற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது. 

ஹெர்சன், ஹார்க்கீவ், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் (Kherson, Kharkiv, Luhanks, Donetsk) ஆகிய நான்கு வட்டாரங்களை, ரஷ்யா அண்மையில் அதனுடன் இணைத்துக்கொண்டது. 

அந்த நான்கு இடங்களிலுமே தனது படைகள் முன்னேறி வருவதாக உக்ரேன் கூறியது. 

குறிப்பாகத் தமது படைகள் ஹெர்சன் வட்டாரத்தில் வேகமாய் முன்னேறி வருவதாக உக்ரேனிய அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி கூறினார். 

இருப்பினும், அந்த நான்கு பகுதிகளும் எப்போதுமே ரஷ்யாவுக்குத்தான் சொந்தம் என்றும் அவை ரஷ்யாவுக்கே திரும்பவரும் என்றும் கிரெம்ளின் பேச்சாளர் கூறினார். 

அனைத்துலக எதிர்ப்பையும் மீறி, அந்த இணைப்பை அதிகாரபூர்வமாக்கும் சட்டங்களில், ரஷ்ய அதிபர் புட்டின் கையெழுத்திட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்