உக்ரேன் விவகாரம் - ஐரோப்பியத் தலைவர்கள் அவசரச் சந்திப்பு
வாசிப்புநேரம் -

AFP PHOTO / National Police of Ukraine
உக்ரேன் விவகாரம் குறித்து ஐரோப்பியத் தலைவர்கள் நாளை (17 பிப்ரவரி) அவசர ஆலோசனை நடத்தவுள்ளனர்.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் நீடிக்கும் வேளையில் உக்ரேன் விவகாரம் அமெரிக்க ஐரோப்பிய உறவுக்குப் பெரும் சவாலாய் அமைந்திருக்கிறது.
உக்ரேன் போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐரோப்பாவும் இடம்பெற வேண்டும் என்பதை உறுதிசெய்ய அந்த வட்டாரத் தலைவர்கள் முயல்கின்றனர்.
அமெரிக்காவின் மூத்த பேராளர்கள் குழு ரஷ்ய, உக்ரேன் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசவுள்ளதாக வாஷிங்டன் கூறியது. சவுதி அரேபியாவில் விரைவில் அந்தச் சந்திப்பு நடக்கும்.
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க விரைவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் (Vladimir Putin) சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அறிவித்துள்ளார்.

ஆதாரம் : Others