Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளராகச் சேர்ந்துகொள்ள உக்ரேனுக்கு ஒப்புதல்

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளராகச் சேர்ந்துகொள்ள உக்ரேனுக்கு ஒப்புதல்

(JOHN THYS / AFP)

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனும் மோல்டோவாவும் வேட்பாளர் என்ற நிலையில் சேர்ந்துகொள்ள, ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். 

அந்த முடிவைத் தனித்துவமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பாராட்டினார்.

ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் ஐரோப்பாவில் இடம்பிடிக்கவும் உக்ரேன் முயன்றுவருகிறது.

உக்ரேனின் எதிர்காலம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதாக அவர் சொன்னார்.

ஒன்றியத்தின் நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்புறத்தில் 30 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் உக்ரேனியக் கொடி நிறுவப்பட்டுள்ளது. 

உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரபூர்வமாக இணைய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிப்பதற்காக, ஒன்றியத்தில் உக்ரேனைச் சேர்த்துக்கொள்வது துரிதப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்