Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனில் விதை விதைக்கலாம்...ஆனால் எரிபொருள் இல்லை..உலகிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் (படங்கள்)

வாசிப்புநேரம் -
உக்ரேனில் விதை விதைக்கலாம்...ஆனால் எரிபொருள் இல்லை..உலகிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் (படங்கள்)

(படம்: Dmitry Lovetsky/AP)

உக்ரேனில் விதை விதைக்கும் காலம் தொடர்கிறது...

இருப்பினும் எரிபொருள் நெருக்கடி உணவு உற்பத்தியில் தடங்கலை ஏற்படுத்துகிறது...

உக்ரேனின் உணவுப்பொருள் ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கானோருக்கு  உணவுப் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது...

உக்ரேன்...

  • உலகின் ஆகப்பெரிய சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியாளர்..
  • ஆகப்பெரிய சோள ஏற்றுமதியாளர்களில் மூன்றாவது இடம் ..
  • கோதுமை ஏற்றுமதியிலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.  

ரஷ்யாவும் உக்ரேனும் சேர்ந்து உலகின் கோதுமை ஏற்றுமதியில் 30 விழுக்காட்டிற்குப் பங்களிக்கின்றன.

இருப்பினும் கெர்சன் (Kherson), மிகோலயவ் (Mykolaiv) உள்ளிட்ட போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் விதைகளை விதைக்கமுடியாது.

துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதால் உணவு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் வழியில்லை என்று உழவர்கள் கூறுகின்றனர்.

விதைகளை விதைப்பதற்குத் தேவையான எரிபொருள் தீர்ந்துவிடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

உக்ரேன் எண்ணெய் இறக்குமதிகளை அதிகம் நம்பியிருக்கிறது.

இறக்குமதிகளில் 70 விழுக்காடு எண்ணெய்  ரஷ்யா, பெலரூஸ் (Belarus) ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது.

உக்ரேனில் பூச்சிக்கொல்லிகள், உரம்  ஆகியவற்றுக்கும் பற்றாக்குறை ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்