உக்ரேனியத் தானியங்கள் ஏற்றுமதி உடன்பாடு - மேலும் 120 நாள்களுக்கு நீட்டிப்பு
வாசிப்புநேரம் -

(படம்: AFP/Genya Savilov)
உக்ரேனின் தானியங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான உடன்பாடு மேலும் 120 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் 60 நாள்களுக்கு மட்டுமே உடன்பாட்டை நீட்டிக்கலாம் என்று ரஷ்யா கூறியது.
பிறகு உக்ரேனின் விருப்பத்துக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்தது.
துருக்கியே தொடங்கி வைத்த அந்த உடன்பாடு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் இடம்பெற்றது.
முதலில் செய்யப்பட்ட உடன்பாடு காலாவதியாகும் கடைசி சில மணி நேரத்தில் உடன்பாட்டைப் புதுப்பிக்க உக்ரேனும் ரஷ்யாவும் இணங்கின.
போர் தொடங்கியதால் 24 மில்லியன் டன் உக்ரேனியத் தானியம் வெளியே செல்ல முடியாமல் உக்ரேனியத் துறைமுகங்களில் சிக்கிக்கிடந்தது.
துருக்கியே முயற்சியால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உடன்பாடு செய்யப்பட்டது.
கருங்கடல் தானியத் திட்டம் ரஷ்ய-உக்ரேனியத் தானியம் வெளியே வர உதவுகிறது. உலகெங்கும் உணவு விலை ஏற்றம் மேலும் மோசமாகாமல் தடுக்கிறது.