Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனிலிருந்து களவாடப்பட்ட தானியங்களை ஏந்திச்சென்ற சரக்குக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது

வாசிப்புநேரம் -

உக்ரேனிடமிருந்து களவாடப்பட்ட தானியங்களை ஏந்திச்சென்ற சரக்குக் கப்பல் ரஷ்யாவின் கடல் பகுதிக்குள் திருப்பி அனுப்பப்பட்டதாக துருக்கியேவின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த நடவடிக்கைக்குக் கீவ் கண்டனம் தெரிவித்துள்ளது.

களவாடப்பட்ட கோதுமையை ஏந்திச்சென்ற கப்பல், ரஷ்யா கையகப்படுத்திய துறைமுகத்திலிருந்து புறப்பட்டதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியது.

அந்தக் கப்பலை துருக்கியே நிறுத்தி வைத்து, களவாடப்பட்ட கோதுமையைத் திருப்பி தரும்படி கீவ் உத்தரவிட்டிருந்தது.

உக்ரேனின் சொத்துகளைத் தேசியமயமாக்கியுள்ளதாக கூறிய ரஷ்யா உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்குவதாகச் சொன்னது.

நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள துருக்கியே உக்ரேனுடனும் ரஷ்யாவுடனும் கொண்டிருக்கும் நல்ல உறவைத் தக்கவைக்கும் வகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படுகிறது.

கப்பலில் இருந்த கோதுமைக்கு என்ன ஆனது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்