Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முதல் முறையாக பின்னடைவு காணும் ரஷ்யத் துருப்பினர்

வாசிப்புநேரம் -

உக்ரேனின் இரண்டாவது ஆகப்பெரிய கார்கிவ் (Kharkiv) நகரிலிருந்து ரஷ்யத் துருப்பினர் மீட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சண்டையில் உக்ரேன் வெற்றிபெறுவது போல் தெரிவதாக அமெரிக்காவின் அரசியல் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

வட கிழக்கின் கார்கிவ் நகரை மாஸ்கோ முக்கியமாகக் குறிவைத்தது. உக்ரேனிய வீரர்களின் தற்காப்பு ஆற்றலால் அங்கு ரஷ்யத் துருப்பினருக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் மூர்க்கமான சண்டை தொடர்கிறது.

எதிரிப் படையினரின் முன்னேற்றத்தைத் தடுக்க டோன்பாஸ் (Donbas) வட்டாரத்தில் ஒரு பாலத்தைத் தகர்த்துவிட்டதாக உக்ரேன் கூறுகிறது.

ரஷ்யக் கவச வாகன அணியின் ஒரு பகுதியும் அழிக்கப்பட்டது.

பெருமளவு படையினரைக் குவித்திருந்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண முடியாமல் ரஷ்யா பேரிழப்பைச் சந்தித்துள்ளதாக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு கூறியது.

கீவ் நகரிலிருந்து பின்வாங்கிய ஒரு மாதத்துக்குப் பிறகும் அங்குள்ள நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்களின் உடல்களுக்கு இதுவரை உரிமை கோரப்படவில்லை.

ஆதாரம் : CNN

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்