Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

உக்ரேனில் படைகளை நிறுத்துவதோடு ரஷ்யா நிறுத்திக்கொள்ளும் என்று மேலை நாடுகள் நம்புகின்றன;ஆனால் அது தப்புக்கணக்கு ஆகலாம்: அரசியல் கவனிப்பாளர்

வாசிப்புநேரம் -

உக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யா ராணுவ உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சில மாதங்களாகப் புகைந்து கொண்டிருந்த பிரச்சினை உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்கா இது குறித்து தொடர்ந்து எச்சரித்துவந்தது. ஆனால் உக்ரேன் உட்பட பல நாடுகள் அமெரிக்கா இதைப் பெரிதுபடுத்துவதாகக் கூறிவந்தன.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் உள்ள இரு இடங்களில் ரஷ்யா தனது படைகளை நிறுத்தத் தொடங்கியது. அவற்றைச் சுதந்திரம் பெற்ற இடங்களாக அறிவித்தது.

அங்கிருந்து தலைநகர் கீவை அது எளிதாகத் தாக்கத் தொடங்கிவிட்டது.

ரஷ்யா இதன் மூலம் சாதிக்க விரும்புவது என்ன? அமெரிக்காவும் மேலை நாடுகளும் என்ன எண்ணம் கொண்டிருக்கின்றன?

அரசியல் கவனிப்பாளர் திரு மணி மணிவண்ணனிடம் பேசியது 'செய்தி'.

இவ்வளவு நாள், ரஷ்ய ஆதரவில் இயங்கிவரும் உக்ரேனின் பகுதிகளை விட்டுக்கொடுக்க நாடுகள் தயாராக இல்லை; அதேசமயம் போரில் இறங்கவும் தயாராக இல்லை. தடைகளை மட்டுமே காட்டி மிரட்டிவந்தன. ஆனால் அது ரஷ்யாவைத் தடுக்கப் போவதில்லை என்றார் திரு மணிவண்ணன்.

"உக்ரேனையும் சேர்த்துக்கொண்டு நேட்டோ கூட்டணிப் படை மேலைநாடுகளின் ஆதிக்கத்தால் தனது எல்லைக்கே வரக்கூடும் என்பதை ரஷ்யா போன்ற ஒரு வல்லரசால் ஏற்றுக்கொள்ளவே முடியாது."

தற்போதைக்கு உக்ரேனுக்குள் தனது படைகளை நிறுத்தினால் போதும் என்று ரஷ்யா தனது ஆதிக்கத்தை மட்டும் காட்டி நிறுத்திவிடும் என்று மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன. ஆனால் அது தப்புக் கணக்காகலாம்."

என்றார் திரு மணிவண்ணன்.

இந்தப் படையெடுப்பின் உடனடி விளைவு....

உலகெங்கும் கச்சா எண்ணெயின் விலையேற்றம் பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சீனாவுக்கு இந்தப் படையெடுப்பால் கூடுதல் ஆதாயங்கள் கிடைக்கலாம்.

தென் கிழக்காசிய நாடுகளுக்கு அதிகப் பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை; ஆனால் தைவானுக்குச் சீனாவின் வருங்காலத் திட்டம் குறித்த கலக்கம் எழலாம் என்றார் திரு மணிவண்ணன்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்