Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"அதிகாரிகள் வேலை தொடர்பான காரணங்களுக்கு மட்டுமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம்" - உக்ரேனிய அதிபர்

வாசிப்புநேரம் -

உக்ரேனிய உயர் அதிகாரிகள் வேலை தொடர்பான காரணங்களுக்காக மட்டுமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

அதிகாரிகள் ஓய்வெடுக்க விரும்பினால், அரசாங்கச் சேவைக்கு அப்பால் ஓய்வெடுக்கலாம் என்றும் அதிகாரத்துவக் காரணங்களின்றி அவர்கள் இனி பயணம் செய்யமுடியாது என்றும் அதிபர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார். 

உக்ரேனின் மூத்த அதிகாரிகள் சிலர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். 

உணவுக் கொள்முதல் ஊழல் உக்ரேனியப் பாதுகாப்பு அமைச்சைப் பெரிதும் பாதித்துள்ளது. 

ராணுவத் தளவாடப் பிரிவுத் தலைவரான தற்காப்புத்துறை  துணைமைச்சர் வ்யாஷெஸ்லாவ் ஷாப்போவாலோவும் (Vyacheslav Shapovalov) பதவி விலகுவோரில் ஒருவர். 

உணவுப் பொருள்களின் உண்மை விலையை விடக் கூடுதல் விலையைக் குறிப்பிடும் குத்தகைகளில் கையெழுத்திடுவதாக உக்ரேனியத் தற்காப்பு அமைச்சின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

அதிபர் அலுவலகத் துணைத் தலைவர் கிரிலோ டிமோஷென்கோவும் (Kyrylo Tymoshenko) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

அதற்கான காரணம் சொல்லப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்