Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பொது வாக்கெடுப்புத் தொடங்கியது

வாசிப்புநேரம் -

உக்ரேனில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பொது வாக்கெடுப்புத் தொடங்கியிருக்கிறது. 

ரஷ்ய எல்லையோரம் உள்ள லுஹான்ஸ்க் (Luhansk), டோனெட்ஸ்க் (Donetsk), ஹெர்சன் (Kherson) ஸப்போரிஸ்ஸியா (Zaporizhzhia) ஆகிய வட்டாரங்களில் மக்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். 

அந்த 4 வட்டாரங்களும் உக்ரேனின் மொத்தப் பிரதேசத்தில் 15 விழுக்காட்டை வகிக்கின்றன.

ரஷ்யாவோடு இருக்க விருப்பமா உக்ரேனோடு இருக்க விருப்பமா என்பது குறித்து மக்கள் வாக்களிக்கின்றனர். 

பொது வாக்கெடுப்பு அந்த 4 பிரதேசங்களையும் ரஷ்யாவோடு இணைத்துக்கொள்வதற்கு மாஸ்கோ மேற்கொள்ளும் சட்டவிரோதமான நடவடிக்கை என்று மேற்கத்திய நாடுகள் குறைகூறுகின்றன.  

மக்கள் அவர்களின் விருப்பத்தைத் தெரிவிக்க வாய்ப்புத் தருவதாக ரஷ்யா கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்