Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்ய அதிபர் புட்டின் ஜூடோ போட்டியில் சிறுவனால் தூக்கி வீசப்படும் அஞ்சல்தலைகள்...

வாசிப்புநேரம் -

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்து ஓராண்டு ஆகிவிட்டதைக் குறிக்க உக்ரேன் சிறப்பு அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது. 

பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் பாங்க்ஸியின் (Banksy) சித்திரம் ஒன்று அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஜூடோ (judo) போட்டியில் சிறுவனால் தூக்கி வீசப்படும் ஓவியமே அது...

உக்ரேன் தலைநகர் கீவுக்கு அருகே உள்ள போரோடியங்கா (Borodyanka) ஊரில் ரஷ்யத் தாக்குதலால் சிதைந்த வீட்டின் சுவரில் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.

அஞ்சல்தலையில் அந்த ஓவியத்துடன் திரு. புட்டினைச் சாடும் சொற்களும் இடம்பெற்றிருப்பதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

திரு. புட்டின் ஜூடோ கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

ரஷ்யத் தாக்குதலுக்கு உக்ரேனின் கடும் எதிர்ப்பை அந்த ஓவியம் சித்திரிப்பதாக உக்ரேனியர்கள் பலர் கருதுகின்றனர்.

அந்த அஞ்சல்தலைகளை வாங்கக் கீவில் பலர் விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

-AFP

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்