Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா படையெடுக்கும் திட்டம் குறித்து ரஷ்ய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

வாசிப்புநேரம் -

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) ரஷ்ய வெளியுறவு அமைச்சரை சுவிட்சர்லந்தில் சந்திக்கவிருக்கிறார்.

ரஷ்யா, உக்ரேனுக்கெதிராகப் படையெடுக்கக்கூடுமெனப் பதற்றம் அதிகரித்துவருகிறது.

தற்போதைய நிலைமையின் அவசரத்தைப் பற்றி வெள்ளை மாளிகை பத்திரிக்கைச் செயலாளர் ஜென் சாக்கி (Jen Psaki) சுட்டினார்.

மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த வாரம் ஐரோப்பாவில் இடம்பெற்ற அரசதந்திரப் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளன.

அதைத் தொடர்ந்தே திரு. பிளிங்கன் (Blinken) ரஷ்யப் பிரதிநிதிகளைக் காணச் செல்கிறார்.

உக்ரேன் உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு விவகாரங்களின் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையே கருத்துவேறுபாடுகள் நீடிக்கின்றன.

அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரஷ்யா மறுத்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்