Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யா - உக்ரேன் போர் - 365 நாள்கள்...நடந்தது என்ன?

வாசிப்புநேரம் -
ரஷ்யா - உக்ரேன் போர் - 365 நாள்கள்...நடந்தது என்ன?

(படம்: Dimitar DILKOFF / AFP)

ரஷ்ய-உக்ரேன் போர் தொடங்கி ஓராண்டாகிவிட்டது.

365 நாள்களில் நடந்தது என்ன?

24 பிப்ரவரி 2022

உக்ரேன் மீதான படையெடுப்பு தொடங்கியது.

தலைநகர் கீவ்விலும் கிழக்கில் கார்கிவ்விலும்  (Kharkiv) ஆகாயத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மரியுபோல் (Mariupol),ஒடேசா (Odesa) ஆகியவற்றில் ரஷ்யத் துருப்புகள் களமிறங்கின.

படம்: AFP

Chernobyl அணுச்சக்தி ஆலையையும் கருங்கடலில் உள்ள Snake தீவையும் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

உக்ரேனிலிருந்து மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பினர்.

உலக நாடுகள் ரஷ்யாவுக்குத் தடைகள் அறிவித்தன.

உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

(JACK GUEZ / AFP)

25 பிப்ரவரி 2022

ரஷ்யத் துருப்புகள் கீவின் எல்லையை அடைந்தன.

தாம் தொடர்ந்து நகரில் இருக்கவிருப்பதாகவும் நாட்டைப் பாதுகாக்கவிருப்பதாகவும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) காணொளி ஒன்றில் கூறினார்.

2 மார்ச் 2022

ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் விழுந்த முதல் பெரு நகரமானது ஹெர்சன் (Kherson).

அதற்கு அடுத்த சில நாள்களில் Zaporizhzhia வட்டாரத்தின் பெரும் பகுதியும் அதன் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. அங்கு ஐரோப்பாவின் ஆகப் பெரிய அணுச்சக்தி ஆலை இருந்தது.

(கோப்புப் படம்: AFP/Ed JONES)

ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை, உக்ரேனிலிருந்து ரஷ்யத் துருப்பினர்  வெளியேற வேண்டும் என்னும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

15 மார்ச் 2022

உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்முறையாக உலகத் தலைவர்கள் அங்குச் சென்றனர்.  செக் குடியரசு (Czech Republic), போலந்து, சுலோவேனியா (Slovenia) ஆகியவற்றின் தலைவர்கள் கீவுக்குச் சென்றனர்.

அதற்கு அடுத்த சில மாதங்களில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் உக்ரேனுக்குச் சென்றனர்.
 

(படம்: PETER NICHOLLS / POOL / AFP)

29 மார்ச் 2022

சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின் வட உக்ரேனில் ராணுவ நடவடிக்கையைக் குறைப்பதாக ரஷ்யா சொன்னது. கீவுக்கு அருகிலிருந்தும் துருப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டன.

3 ஏப்ரல் 2022

பூச்சா (Bucha) வட்டாரத்தில் புதைகுழிகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போர்க் குற்றங்கள் புரிந்ததன் தொடர்பில் ரஷ்யா பொறுப்பேற்கவேண்டும் என்று உலகத் தலைவர்கள் வலியுறுத்தினார்.

பின்னர் ஐக்கிய நாட்டு மனித உரிமை மன்றத்திலிருந்து ரஷ்யா தடைசெய்யப்பட்டது.

14 ஏப்ரல் 2022

ரஷ்யாவின் முக்கியமான கடற்படைக் கப்பலான மோஸ்க்வா (Moskva) மீது உக்ரேன் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. கப்பல் கடலுக்குள் மூழ்கியது.

<p>(படம்: AFP)</p>

16 மே 2022

ரஷ்யா கைப்பற்றாத இறுதி பெரும் நகரமான மரியுபோலும் (Mariupol) அந்நாட்டின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. நகரின் எஃகு ஆலையில் இருந்த உக்ரேனிய துருப்புகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கின.

ரஷ்ய எல்லையிலிருந்து கிரைமியா (Crimea) பகுதிக்குப் பாதை கிடைத்தது.

படம்: Andrey BORODULIN / AFP
<p>படம்: AFP</p>

22 ஜூலை 2022

உக்ரேனின் கருங்கடல் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்ட தானிய இருப்புகளின் ஏற்றுமதியைத் தொடங்க இணக்கம் எட்டப்பட்டது.

ஏற்றுமதி ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கியது.

(படம்: Ozan KOSE / AFP)

9 ஆகஸ்ட் 2022

கிரைமியா பகுதியில் உள்ள ஆகாயப் படை தளங்களில் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் கூறியது.

21 செப்டம்பர் 2022

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை உக்ரேன் மீட்டெடுக்கும் நிலையில் ரஷ்யா 300,000 போர்க்காலப் படை வீரர்களை ஈடுபடுத்தியது.

29 செப்டம்பர் 2022

ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயுவை ஏந்திச் செல்லும் Nord Stream எரிவாயுக் குழாயில் வெடிப்புகள் ஏற்பட்டன. அதற்கு யார் பொறுப்பு என்று தெரியவில்லை.

(படம்: Danish Defence Command via AP)

30 செப்டம்பர் 2022

உக்ரேனில் 4 வட்டாரங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் ஆவணங்களில் ரஷ்ய அதிபர் கையெழுத்திட்டார்.

8 அக்டோபர் 2022

கிரைமியா பகுதியையும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டது.

(AFP)

11 நவம்பர் 2022

உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள ஹெர்சன் (Kherson) நகரிலிருந்து தனது படையினரை மீட்டுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாக ரஷ்யா தெரிவித்தது.

போரில் மூன்றாம் முறையாக ரஷ்யா பெரிய அளவில் துருப்புகளை மீட்டுக்கொண்டது.

5 டிசம்பர் 2022

ரஷ்யாவின் ஆகாயப் படை தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியது.

21 டிசம்பர் 2022

உக்ரேனிய அதிபர் அமெரிக்காவுக்குச் சென்றார்.

போர் தொடங்கிய பிறகு அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் அது.


13 ஜனவரி 2023

உக்ரேனில் Soledar எனும் உப்புச் சுரங்கங்கள் இருக்கும் வட்டாரத்தை ரஷ்யா கைப்பற்றியது.

ஜூலைக்குப் பிறகு முதல்முறையாக ரஷ்யா உக்ரேனின் முக்கிய நிலத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

20 பிப்ரவரி 2023

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரகசியமாகக் கீவுக்குச் சென்றார். அமெரிக்கா 500 மில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை உக்ரேனுக்குத் தரும் என்று உறுதி அளித்தார்.

(படம்: REUTERS/Evelyn Hockstein)

21 பிப்ரவரி 2023

உக்ரேனில் போரைத் தொடரவிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) சூளுரைத்தார்.

உக்ரேனுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும்படி திரு பைடன் நேட்டோ கூட்டணிகளிடம் கூறினார்.

24 பிப்ரவரி 2023

ரஷ்ய-உக்ரேன் போரின் ஓராண்டு நிறைவு அனுசரிக்கப்படுகிறது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்