Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனிலிருந்து வேளாண் பொருள்களுடன் இரண்டாம் தொகுதிக் கப்பல்கள் புறப்பட்டன

வாசிப்புநேரம் -

உக்ரேனின் கருங்கடல் துறைமுகங்களிலிருந்து வேளாண் பொருள்களுடன் இரண்டாவது தொகுதிக் கப்பல்கள் புறப்பட்டுள்ளன.

உக்ரேனிலிருந்து கூடுதலான தானியங்கள் அனுப்பப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளில் அதுவும் ஒன்று.

அதன் உணவு ஏற்றுமதிகள் மீண்டும் தொடங்க, துருக்கியே, ஐக்கிய நாட்டு நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உடன்பாடு கையெழுத்தானது. 

பிப்ரவரியில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, அதன் உணவு ஏற்றுமதிகள் தடைபட்டன.

உக்ரேனின் ஒடேசா, சோர்னோமோர்ஸ்க் துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட 4 கப்பல்கள், சீனா, துருக்கியே, இத்தாலி ஆகியவற்றுக்குச் செல்கின்றன.

தானிய ஏற்றுமதிகளைப் பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்ய அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை, சிறப்பாகச் செயல்படுவதாய் உக்ரேனின் உள்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்