உக்ரேன்மீதான ரஷ்யப் படையெடுப்பு...மக்கள் அவதி (படங்கள்)

படம்: AP Photo/Alexei Alexandrov
ரஷ்யா, உக்ரேன்மீது முழுவீச்சில் ராணுவத் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரேனைவிட்டு வெளியேறியுள்ளனர்.
பல இடங்கள் அழிந்துபோயின...
பலர் காயமுற்றனர்...
உக்ரேனில் நிலவும் பதற்றம்... படங்கள் வாயிலாக...

மிகொலைவில் (Mykolaiv) தாக்குதலுக்கு இலக்கான வட்டார அரசாங்கத் தலைமையகம் அமைந்துள்ள இடத்தில் பணிபுரியும் அவசரகாலப் பணியாளர்கள்...

மரியுப்போலில் (Mariupol) தாக்கப்பட்ட கட்டடங்களின் பின்புறத்தில் சமையல் செய்யும் பெண்...

உக்ரேனைவிட்டு வெளியேறிய அகதிகள் போலந்து எல்லையில் வரிசையில் காத்திருக்கின்றனர்...

ரஷ்யத் தாக்குதலில் அழிக்கப்பட்ட உணவுக் கிடங்கிற்குள் நடந்து செல்லும் செய்தியாளர்கள்...

துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் உக்ரேனிய ராணுவ வீரர்கள்...