Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கால் இல்லை என்றால் என்ன? என்னால் ஓடக்கூட முடியும் - உக்ரேனிய ராணுவ வீரர்

வாசிப்புநேரம் -
"நான் ஊனமுற்றவன் இல்லை. கூடிய விரைவில் நான் மனித இயந்திரம் போல் செயல்படுவேன்" என்று வொலோடிமிர் மலிகின் (Volodymyr Malykhin) சிரித்துக்கொண்டே AFP-யிடம் சொன்னார்.

தென் உக்ரேனில் ரஷ்யத் துருப்புகளுக்கு எதிராகப் போரிட்டபோது அந்த 31 வயது வீரர் தமது கால்களை இழந்தார்.

சக ராணுவ வீரரைக் காப்பாற்றும்போது அவர் கண்ணிவெடியில் மிதித்ததால் அவருக்கு இந்த நிலை.

அப்போதும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறுகிறார் மலிகின்.

மறுவாழ்வு, மறு ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான திட்டத்தின்கீழ் உடற்குறையுள்ள ராணுவ வீரர்கள் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அவர்கள் போரில் பாதிக்கப்பட்டவர்கள்.

காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு இது போன்ற நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய விரும்புவதாக அதிகாரிகள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்