Skip to main content
உக்ரேன் போர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உக்ரேன் போர் - புட்டின் பேச்சுவார்த்தை

வாசிப்புநேரம் -
உக்ரேன் போர் - புட்டின் பேச்சுவார்த்தை
(படம்: Sputnik/Alexander Kazakov/Pool via REUTERS)
வெளியீடு : 03 Dec 2025 09:26AM புதுப்பிப்பு : 03 Dec 2025 11:16AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஒரு வரைவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

அமெரிக்கச் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்கொஃப் (Steve Witkoff), அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) மருமகனும் ஆலோசகருமான ஜாரட் குஷ்னர் (Jared Kushner) ஆகிய இருவரும் மாஸ்கோவில் திரு புட்டினுடன் பேச்சு நடத்தினர்.

ஐந்து மணிநேரப் பேச்சு ஆக்கபூர்வமாய் இருந்தது என்று ரஷ்ய அதிபரின் வெளியுறவு ஆலோசகர் கிரில் டிமிட்ரீவ் (Kirill Dmitriev) கூறினார்.

சில பகுதிகளை உக்ரேன் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்பது வரைவுத் திட்டத்தின் முக்கியமான நிபந்தனை.

உக்ரேன் அதற்கு இணங்கவில்லை.

அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி உடன்பாட்டில் இன்னும் சில அம்சங்களைச் சேர்க்க வேண்டியிருப்பதாக உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி ( Volodymyr Zelenskyy) கூறினார்.

ஆனால், முன்னெப்போதையும் விட போரை முடிவுக்குக் கொண்டுவர இப்போது வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்