Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனியத் துறைமுகங்களிலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட 3 கப்பல்கள்

வாசிப்புநேரம் -

உக்ரேனின் துறைமுகங்களிலிருந்து 3 கப்பல்கள் தானியங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளதாகத் துருக்கியேயின் தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது. 

ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து முதன்முறையாக உக்ரேனியத் துறைமுகமான ஒடேசாவிலிருந்து தானியக் கப்பல் ஒன்று சென்ற திங்கட்கிழமை புறப்பட்டது. 

உக்ரேனியத் தானிய விநியோகங்கள் போரால் தடைபட்டுள்ளதால் பஞ்சம் ஏற்படக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் முன்னதாக  எச்சரித்திருந்தது.

அதன் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவனமும் துருக்கியேயும்  மாஸ்கோவுக்கும் கீவுக்கும் இடையில் அரசதந்திர ரீதியான உடன்பாடு எட்டப்படுவதற்குக் கைகொடுத்துள்ளன. அதன்படி தானியங்களை ஏற்றிச்செல்லப் பாதுகாப்பான விநியோகப் பாதையை ஏற்படுத்தித்தர ரஷ்யாவும் உக்ரேனும் ஒப்புக்கொண்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்