Skip to main content
$20,000 திருமண கேக்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

$20,000 திருமண கேக்!

வாசிப்புநேரம் -
$20,000 திருமண கேக்!

Instagram/bastien_blanc_tailleur

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

திருமணத்துக்கான செலவுகள் ஏராளம்.

மண்டபத்தில் தொடங்கி மணமக்கள் ஆடை அணிகலன் வரை கணக்கில்லாமல் செலவுசெய்வோர் பலர் இருக்கின்றனர்.

இந்தியாவில் நடந்த கல்யாணம் ஒன்றில் கேக்கிற்கு மட்டுமே $20,000 ஆனதாம்!

அந்தத் திருமணத்துக்கான மொத்தச் செலவு $6.7 மில்லியன்.

மணமகள் பெயர் நேத்ரா மன்ட்டேனா. பில்லியன் கணக்கான சொத்துகளுக்கு வாரிசு.

மணமகன் வம்சி காதிராஜூ. மாபெரும் தொழில்முனைவர்.

பிரபல அமெரிக்கப் பாடகி ஜெனிஃபர் லோபேஸின் ஆடலும் பாடலும் திருமணக் கொண்டாட்டங்களின் மற்றொரு சிறப்பம்சம்.

ஆனால் பலரின் கண்ணைப் பறித்ததென்னவோ திருமண கேக் தான்.

கோபுரம்போலப் பல அடுக்குகளைக் கொண்ட பிரமாண்ட அரண்மனையாகக் காட்சியளித்தது அந்த இனிப்பான கேக்!

அதன் உயரம் 15 அடி என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

பிரஞ்சு சமையல்கலை நிபுணர் பாஸ்டியன் பிளாங்க்-டைல்லூர் (Bastien Blanc-Tailleur) கேக்கை உருவாக்கினார்.

Related article image
SAMSON / AFP

ஆர்க்கிட் மலர்கள், யானைகள், துல்லிய விவரங்கள் அனைத்தும் சர்க்கரையால் செய்யப்பட்டன.

இந்த கேக்கையும் மேலும் நான்கு கேக்குகளையும் செய்வதற்கு எத்தனை மணிநேரம் பிடித்தது தெரியுமா?

மொத்தம் 3,500 மணிநேரம்! கடைசிநேரப் பரபரப்பில் பல சவால்கள் இருந்தபோதிலும் இறுதியில் திருமணத்தில் கலந்துகொண்ட பல பிரமுகர்களின் கண்ணில் நின்றது கேக் மட்டுமே!

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்