Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மலேசியாவின் MH17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாமீது வழக்குப் பதிய ஐக்கிய நாட்டு விமானச் சேவை மன்றம் வாக்களிப்பு

வாசிப்புநேரம் -
மலேசியாவின் MH17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாமீது வழக்குப் பதிய ஐக்கிய நாட்டு விமானச் சேவை மன்றம் வாக்களிப்பு

MH17 விமானச் சிதைவு. (படம்: AFP)

மலேசியாவின் MH17 விமானம் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்ய ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விமானச் சேவை மன்றம் வாக்களித்திருக்கிறது.

அந்த மலேசிய விமானம் 2014ஆம் ஆண்டு உக்ரேனின் கிழக்குப் பகுதியில் தாக்கப்பட்டது.

அப்போது அந்தப் பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ரஷ்ய ஏவுகணை அந்த விமானத்தைச் சுட்டுத் தகர்த்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

அந்த விமானத்தில் பயணம் செய்த சுமார் 300 பேர் மாண்டனர்.

அனைத்துலகச் சட்டத்தின்படி அந்தச் சம்பவத்துக்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

மாண்டவர்களில் 38 பேர் ஆஸ்திரேலியக் குடிமக்கள்.

அந்த விமானம் தாக்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ரஷ்யா கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்