Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மியன்மாரில் வன்செயலால் 30க்கும் அதிகமானோர் மரணம் - ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் கண்டனம்

மியன்மாரில் வன்செயலால் 30க்கும் அதிகமானோர் மரணம் - ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் கண்டனம்

வாசிப்புநேரம் -

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் மியன்மாரில் சென்ற வாரம் 30க்கும் அதிகமானோர் மாண்டதற்குக் காரணமான வன்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தக் கொலைச் சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதன் அவசியத்தை மன்றத்தின் அறிக்கை வலியுறுத்தியது.

எல்லாவிதமான வன்செயல்களையும் நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அது வேண்டுகோள் விடுத்தது.

பொதுமக்களின் பாதுகாப்பையும் மனித உரிமையையும் மதித்து நடக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை மன்றம் வலியுறுத்தியது.

கிறிஸ்துமஸுக்கு முந்தியநாள், காயா மாநிலத்தில் அந்த வன்செயல் நேர்ந்தது.

அந்த வட்டாரத்தில் ஜனநாயக ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தை எதிர்த்துப் போராடிவருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்