Skip to main content
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காஸாவில் மனிதாபிமான நெருக்கடி - உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் அவசரக் கூட்டம்

வாசிப்புநேரம் -
காஸாவில் மனிதாபிமான நெருக்கடி - உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் அவசரக் கூட்டம்

படம்: Omar AL-QATTAA / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைப் பற்றி விவாதிக்க ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அவசரக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.

பாதுகாப்பு மன்றத்தின் ஐந்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், கிரீஸ், ஸ்லோவேனியா ஆகியவை அவசரக் கூட்டத்துக்கு அறைகூவல் விடுத்தன.

செவ்வாய்க் கிழமை (13 மே) கூட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஸாவுக்குள் உதவி செல்ல முடியாமல் இரண்டு மாதமாக இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பது மன்னிக்க முடியாதது என்று பிரிட்டிஷ் பேராளர்குழு கூறியது.

உதவியைத் தடுத்ததால் பிணையாளிகளை மீட்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது.

பாலஸ்தீனர்கள் பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்தில் சிக்கியிருப்பதாக அது சொன்னது.

UNICEF - ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியமும் அதே கருத்தை வலியுறுத்தியது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்