Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"பாதிக்கப்பட்ட சுடான் மக்களுக்கு 3 பில்லியன் டாலர் நிதியுதவி தேவை"

வாசிப்புநேரம் -
பாதிக்கப்பட்ட சுடான் மக்களுக்கு 3.03 பில்லியன் டாலர் நிதியுதவி அவசரமாய்த் தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்று (17 மே) தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடிப் போகக்கூடும் என்று அது சொன்னது.

சுடானில் கடந்த மாதம் கலவரங்கள் தொடங்கிய பிறகு, மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.

"இன்று சுடானில் பாதிக்கும் அதிகமானோர்...அதாவது சுமார் 25 மில்லியன் பேருக்கு மனிதாபிமான உதவியும் பாதுகாப்பும் தேவைப்படுகின்றன" என ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஜெனிவா பிரிவுத் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் சுடானில் இந்த அளவுக்குச் சிரமம் நேர்ந்ததில்லை என்றும் அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்