தென்கொரிய அதிபர் யூன் பதவி விலகுவது உறுதி - அடுத்த தேர்தல்?
வாசிப்புநேரம் -
Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) பதவி விலகல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது அனைவரின் ஒருமித்த முடிவு என்று கூறப்பட்டது.
தென்கொரிய அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டது.
திடீரென்று ராணுவச் சட்டத்தை அறிவித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
அடுத்த அதிபர் தேர்தல் இன்னும் 60 நாள்களில் நடைபெறும். தென்கொரியாவின் தேசிய தேர்தல் ஆணையம் பின்னர் புதிய அதிபரை அறிவிக்கும்.
அதுவரை திரு ஹான் டக் சூ (Han Duck Soo) தற்காலிகமாக அதிபர் பொறுப்பில் இருப்பார்.
64 வயதுத் திரு யூன் சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் ராணுவ ஆட்சியை அறிவித்தார்; இவ்வாண்டு ஜனவரி 15ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் மார்ச் மாதம் கைதாணை ரத்துச் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இதற்கு முன் 2017ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி அரசியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அப்போதைய அதிபர் திருவாட்டி பார்க் குவென்-ஹே (Park Geun-Hye) அதிபர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த ஆண்டு மே 9ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

தொடர்புடையது:
ஆதாரம் : CNA