Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மரபுடைமைத் தலங்களிலிள்ள சில பனிப்பாறைகள் கரையக்கூடும்! - UNESCO

வாசிப்புநேரம் -

UNESCO அங்கீகாரம் பெற்ற மரபுடைமைத் தலங்கள் பலவற்றில் உள்ள பனிப்பாறைகள் 2050க்குள் கரைந்துவிடக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் அதைத் தவிர்க்கமுடியாது என்று UNESCO அமைப்பு தெரிவித்துள்ளது.

50 தலங்களில் உள்ள 18,600 பனிப்பாறைகளை ஆய்வு செய்ததில் அது தெரியவந்தது.

மொத்தம் 66,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு மறைந்துவிடும் என்று கூறப்பட்டது.

அதிகரிக்கும் வெப்பநிலையால் பனிப்பாறைகள் 2000ஆம் ஆண்டிலிருந்து அதிவேகத்துடன் கரைந்துவருவதாக UNESCO அமைப்பு தெரிவித்தது.

பனிப்பாறைகளில் ஆண்டுதோறும் 58 பில்லியன் டன் ஐஸ் உருகுவதாகக் கூறப்பட்டது.

இருப்பினும் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மரபுடைமைத் தலங்களில் எஞ்சியிருக்கும் பனிப்பாறைகளைக் காப்பாற்றமுடியும் என்று அமைப்பு சொன்னது.

வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த விரைவாகச் செயல்படும்படி உலகத் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்