மீன் பிடிக்கும் விழா....எங்கே?
வாசிப்புநேரம் -
நைஜீரியாவின் கெபி (Kebbi) மாநிலத்தில் திருவிழாக் கோலம்.
ஆறாண்டிற்குப் பின் அர்குங்கு (Argungu) மீன்பிடிக்கும் விழா மீண்டும் நடைபெற்றது.
39 டிகிரி கொளுத்தும் வெயில்.
அதைப் பொருட்படுத்தாமல் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்.
பக்கத்து நாடுகளிலிருந்தும் மக்களை ஈர்த்தது விழா.
விழாவிற்கு நீண்ட வரலாறு உண்டு.
மக்களுக்கும் வட்டாரத்தை ஆட்சி செய்தவருக்கும் வெகு காலமாகவே பகை.
அது முடிவுக்கு வந்ததைக் குறிக்க, 1934ஆம் ஆண்டில் விழா நடத்தப்பட்டது.
ஆண்டுகள் கடந்து செல்ல அது நைஜீரியாவின் ஆகப் பெரிய கலாசார விழாக்களில் ஒன்றாக உருவெடுத்தது.
பாதுகாப்பின்மையாலும் நிதிப் பற்றாக்குறையாலும் விழாவைத் தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்.
ஆனால் இந்த ஆண்டு நிலைமை வேறு.
ஆற்றில் இறங்கிய மீனவர்கள் மீனைப் பிடிக்கக் கைகளையும் வலைகளையும் பயன்படுத்தினர்.
அதில் சிக்கியது 59 கிலோகிராம் மீன்.
பிடித்தவருக்குப் பரிசு மழை.
பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சி.
இத்தனை நாளாய் கேள்விப்பட்ட ஒன்றை நேரில் பார்க்க முடிந்த பூரிப்பு அவர்களுக்கு.

ஆதாரம் : Others