ஜப்பானின் வட்டார விமான நிலையத்தில் சிறிய வெடிப்புச் சம்பவம்; எவரும் காயமடையவில்லை
வாசிப்புநேரம் -
ஜப்பானின் மியாசாக்கி (Miyazaki) வட்டார விமான நிலையத்தில் இன்று அனைத்து விமானச் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
விமான ஓடுபாதையும் தற்காலிகமாக மூடப்பட்டது.
அங்கு ஒரு சிறிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகக் காட்டும் காணொளி உள்ளூர் ஊடகத்தில் இடம்பெற்றது.
சம்பவத்தில் யாரும் காயமுற்றதாகத் தகவல் இல்லை.
சம்பவம் குறித்துக் காலையில் தகவல் கிடைத்ததாக ஜப்பானியத் தீயணைப்பாளர்கள் கூறினர்.
விமான நிலைய ஊழியர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறும்படி காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
விமான நிலையக் கட்டட முனையத்திலிருந்து குறைந்தது 100 மீட்டர் தூரத்தில் வெடிப்பு நேர்ந்ததாகத் தெரிகிறது.
விமான இணைப்புப் பாதை மட்டும் பாதிக்கப்பட்டது என்றும், அனைத்து விமானச்சேவைகளும் மாலை வரை நிறுத்தப்பட்டுள்ளன என்றும் விமான நிலைய அதிகாரி AFP செய்தியிடம் சொன்னார்.
காவல்துறையும் தீயணைப்புப் படையும் விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : AFP