Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நிறைவடைந்த ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டம் - உலக விவகாரங்கள் குறித்த அக்கறைகள் நீடிக்கின்றன

வாசிப்புநேரம் -

ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டத்தின் இறுதிக்கட்டச் சந்திப்புகள் நிறைவடைந்துவிட்டன.

இருப்பினும் பல உலக விவகாரங்கள் பற்றிய ஆழ்ந்த அக்கறைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. 

பொதுச்சபைக் கூட்டத்தின் இறுதிநாளில் இந்தோனேசியாவும் கனடாவும் உலக ஒருமைப்பாடு பற்றிய தங்களது அக்கறைகளை முன்வைத்தன.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முக்கியப் பணியாகக் கருதப்படும் பன்முகத்தன்மையின் விதியைப் பற்றி இருநாடுகளும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டன.

அநீதி, சுயநலம் ஆகியவற்றால் உலக ஒருமைப்பாடு மெல்ல மங்கிக்கொண்டிருப்பதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரட்னோ மர்சுடி (Retno Marsudi) தெரிவித்தார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சீர்திருத்தங்கள் சிறிய, பெரிய நாடுகளுக்குச் சமமாக இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் ரஷ்யாவுக்கு ரத்து அதிகாரம் இருப்பதைக் கனடிய வெளியுறவு அமைச்சர் மெலனீ ஜொலி (Mélanie Joly) சுட்டினார்.

உக்ரேன் போரை நேரடியாகக் காரணங்காட்டி ரஷ்யாவின் ரத்து அதிகாரம் குறைக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்