Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டும்: தென்கொரிய அதிபர்

வாசிப்புநேரம் -

உலகம் ஒன்றிணைந்து, சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அழைப்பு விடுத்திருக்கிறார். 

வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வரும் நிலையில், திரு. யூன் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் அவரின் முதல் உரையை ஆற்றினார்.

 பருவநிலை மாற்றம், சுகாதாரம் ஆகியவை பற்றியும் அவர் பேசினார்.

 வளர்ந்துவரும் நாடுகள் பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் உதவத் தென்கொரியா முன்வந்திருக்கிறது.

மேலும் நோய்ப்பரவல்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த அமைச்சர்நிலைக் கூட்டத்தை வரும் என்று நவம்பரில் அது ஏற்றுநடத்தவிருக்கிறது.

இதற்கிடையே, தென் கொரிய அதிபரும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் (Fumio Kishida) மூவாண்டுகளில் முதன்முறையாகச் சந்திக்கவிருக்கின்றனர்.

அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தத் திரு. யூன் எண்ணம் கொண்டுள்ளார். 

போர்க்காலத்தில் ஏராளமானோர் வலுக்கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்பட்டதற்கு இழப்பீடு கொடுக்கும் விவகாரத்தில் தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன.

நேரப் பற்றாக்குறையால் அந்தச் சந்திப்பு அரை மணி நேரமே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்