"வெறுப்புணர்வுக்கு எதிராக ஒன்றாய்த் திரளுங்கள்"
REUTERS/Christian Mang
This audio is generated by an AI tool.
ஜெர்மானிய மக்கள் வெறுப்புணர்வுக்கு எதிராக ஒன்றாய்த் திரளும்படி அந்நாட்டுப் பிரதமர் ஒலாவ் ஷொல்ஸ் (Olaf Scholz) அழைப்பு விடுத்துள்ளார்.
மெக்டபர்க் (Magdeburg) நகரின் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்துக்கு இடையே கார் புகுந்த இடத்தை அவர் பார்வையிட்டார்.
அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அவர் உறுதியளித்தார்.
கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் ஐவர் மாண்டனர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மாநில அரசியல் தலைவர்களுடன் இணைந்து திரு ஷொல்ஸ் மாண்டோருக்காக மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கார் அதிக வேகத்தில் கூட்டத்துக்குள் புகுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.