உலகம் trending
நடுவானில் பதற்றம்: அவசரமாகத் தரையிறங்கிய விமானம்
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் (United Airlines) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நேற்று விமானம் புறப்பட்டது.
தீ எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டவுடன் விமானிகள் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினர்.
விமானம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி (New Jersey) மாநிலத்தில் அமைந்துள்ள நியூவார்க் லிபர்ட்டி (Newark Liberty) அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.
எச்சரிக்கை ஒலி அடித்தவுடன் விமானிகள் 2 இயந்திரங்களில் ஒன்றை நிறுத்தினர்.
தொடர்ந்து தீ ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் விமானத்தில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
256 பயணிகளும் 12 விமானச் சிப்பந்திகளும் விமானத்தில் இருந்தனர்.
சறுக்குகள், படிகள் என விமானத்தின் வலப்பக்கத்திலிருந்த எல்லா வழிகளிலும் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வேறொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.