Skip to main content
வெனிசுவேலா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வெனிசுவேலா - US$300 மில்லியன் கேட்கிறது ஐநா

வாசிப்புநேரம் -
வெனிசுவேலா - US$300 மில்லியன் கேட்கிறது ஐநா

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெனிசுவேலா நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் அவசர உதவிநிதி கோருகிறது.

அது சுமார் 300 மில்லியன் டாலர் (390 மில்லியன் வெள்ளி) கேட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,800க்கும் மேல் தாண்டியுள்ளது.

18,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோரை இன்னும் காணவில்லை.

தற்போது வெனிசுவேலாவிற்குச் சொந்தமான நிதி மற்ற நாடுகளின் வங்கிக் கணக்குகளில் முடக்கப்பட்டிருப்பதாக வெனிசுவேலாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

அதனை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அது மீட்புப் பணிகளுக்கும் மறுசீரமைப்புக்கும் உதவும் என்றார் அவர்.

நிலநடுக்கத்தால் சுமார் 6.7 பில்லியன் டாலர் (8.7 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான சேதம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா வெனிசுவேலாவிற்கு விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை நீக்கியுள்ளது.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்