Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"எடுடா அந்த அரிவாளை!" - தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சற்று மாறுபட்ட விளையாட்டுகள்!

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசிய விளையாட்டுகள் என்றாலே ஓட்டப்பந்தயம், எடை தூக்கும் போட்டி போன்றவற்றைப் பற்றி நினைப்பதுதான் வழக்கம். 

இவ்வாண்டு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறும் தென்கிழக்காசியப் போட்டிகளில் 5 அரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறுகின்றன! 

பென்சாக் சிலாட் (Pencak Silat)

<p>(படம்:&nbsp;Youtube /&nbsp;pesilat muda)</p>

பென்சாக் சிலாட் என்பது முழு உடலையும் கொண்டு சண்டையிடும் ஒருவகை இந்தோனேசியத் தற்காப்புக் கலை. 

அதில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எதிர்த்தரப்புப் போட்டியாளரின் மீது வீசித் தாக்கும் அங்கமும் உள்ளது. 

போட்டியிடுபவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறை, தாக்குதலிலிருந்து தப்பிக்கும் முறை ஆகியவற்றைக் கண்காணித்து, அதற்கான மதிப்பெண்களை நடுவர்கள் வழங்குவார்கள். 

நடனப் போட்டி (Dancesport)

இதில் ஒளிரும் விளக்குகளின் மத்தியில் 90 வினாடிகளுக்கு இடைவிடாமல் ஒலிக்கும் லத்தீன்-அமெரிக்க இசைக்கு இணையாக ஆடி நடுவர்களைக்  கவரவேண்டும்.

பழைமைவாய்ந்த குராஷ் மல்யுத்தச் சண்டை (Kurash)

சுமார் 3,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த குராஷ் தற்காப்புக் கலை மத்திய ஆசியாவில் இடம்பெறும் விழாக்களில் பிரபலமானது. 

அதில்  இருவர் மோதுவர். யார் எதிர்த்தரப்புப் போட்டியாளரின் முதுகை முழுமையாகத் தரையில்  படவைக்கிறாரோ, அவரே வெற்றியாளர். 

வோவினாம் (Vovinam)

<p>(கோப்புப்&nbsp;படம்:&nbsp;AFP/Soe Than Win)</p>

வியட்நாமியத் தற்காப்புக் கலையான இது, சீனாவின் குங்ஃபூ (Kungfu) போன்ற மற்ற ஆசியத் தற்காப்புக் கலைகளின் கலவையாக உள்ளது. 

உயரமாகப் பாய்வது, தலைக்குத் தலை மோதுவது போன்றவற்றைக் கொண்டது வோவினாம். போட்டியிடுபவர்கள் எவ்வளவு சிறப்பாக அத்தகையவற்றைச் செய்கின்றனர் என்பதைப் பொறுத்து நடுவர்கள் மதிப்பெண் வழங்குவர்.

சியாங்ச்சி (Xiangqi)

<p>(கோப்புப் படம்:&nbsp;AFP/Roslan Rahman)</p>

சீனச் சதுரங்கம் என்று அழைக்கப்படும் சியாங்ச்சி, சீனாவிலும் வியட்நாமிலும் மிகப் பிரபலமான விளையாட்டாகும்.

இடமிருந்து வலம் செல்லும் 9 கோடுகள், மேலிருந்து கீழ் செல்லும் 10 கோடுகள் கொண்ட பலகையில் அது விளையாடப்படுகிறது. 

ஹனோயில் இடம்பெறும் 40 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இதுவே மிக மௌனமானது என்று நம்பப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்