Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு மற்றொரு விமானந்தாங்கிக் கப்பலை அனுப்பும் அமெரிக்கா

வாசிப்புநேரம் -
மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு மற்றொரு விமானந்தாங்கிக் கப்பலை அனுப்பும் அமெரிக்கா
AP/Lise Aaserud
வெளியீடு : 14 Feb 2026 10:23AM புதுப்பிப்பு : 14 Feb 2026 02:36PM

அமெரிக்கா இரண்டாவது விமானந்தாங்கிக் கப்பலை மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு அனுப்பியிருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஏற்கனவே USS Abraham Lincoln அங்கு  சென்றது. தற்போது USS Gerald R Ford கப்பல் சென்றிருக்கிறது. 

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமெரிக்கா அண்மை வாரங்களில் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் அணுச்சக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கிவராவிட்டால்
அது மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்று திரு டிரம்ப் எச்சரித்தார். 

ஈரானுடன் பேசுவது சிரமமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.  

அமெரிக்காவும் ஈரானும் ஓமான் ஏற்பாட்டில் நடத்திய பேச்சின் முடிவு தெரியவில்லை. ஒரு மாதத்தில் உடன்பாடு ஏற்படும் என்று நம்புவதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார். 

அணுச்சக்தி பற்றிப் பேச ஈரான் இணங்கியுள்ளது. ஆனால் புவியீர்ப்பு ஏவுகணைத் திட்டத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று அது கூறியுள்ளது.

அத்திட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் சொல்கிறது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்