ஈரானின் அணுச்சக்தித் தளத்தைத் தாக்கிய அமெரிக்கா, இஸ்ரேல்
படம்: AP
This audio is generated by an AI tool.
ஈரானின் அணுச்சக்தித் தளம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாதான்ஸ் (Natanz) தளம் தாக்கப்பட்டதாக ஈரானின் அணுச்சக்தி அமைப்பு தகவல் வெளியிட்டது.
வெளியே ரசாயனக் கசிவு ஏற்பட்டதாக அறிகுறி ஏதுமில்லை என்று அது சொன்னது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கெனவே இம்மாதத் தொடக்கத்தில் அதே அணுச்சக்தித் தளத்தைத் தாக்கின.
இதற்கிடையே, ஈராக் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாக்தாத்தில் (Baghdad) உள்ள உளவுத்துறைத் தலைமையகம் மீது வானூர்தித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
வளாகத்தின் தொலைதொடர்புக் கட்டடம் மீது குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
செல்வந்தர்கள் அதிகம் செல்லும் விளையாட்டுச் சங்கக் கட்டடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.